119எனும் அவசர தொலைபேசி இலக்கத்தை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாமென, பொலிஸ் தலைமையகம் பொது மக்களை கேட்டுள்ளது. இலங்கை பொலிஸ் தலைமையகம் மேற்கொள்ளும் அவசர அழைப்பு பிரிவு, பொது மக்களுக்கு துரித சேவையை வழங்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பொலிஸார் மேற்கொள்ளும் வேலைத்திட்டத்தை, ஒரு சாதாரண பணியாக கருத முடியாது.
மிரிஹானையில் ஏற்படுத்தப்பட்டுள்ள அவசர அழைப்பு பிரிவில் 40 தொலைபேசிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் 20 தொலைபேசிகள், பொது மக்களின் முறைப்பாடுகளை பெற்றுககொள்வதற்கும், கிடைக்கின்ற முறைப்பாடுகளை குறித்த பொலிஸ் நிலையங்களுக்கு வழங்குவதற்கென, மேலும் 20 தொலைபேசிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இரவு பகல் என 24 மணிநேரமும், இவர்கள் இப்பொதுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரிவிற்கு கிடைக்கும் அழைப்புகளை பெற்றுக்கொண்டு நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு இவற்றை பெற்றுக்கொடுப்பதற்கு மேலதிகமாக, பிராந்திய ரீதியில் உள்ள தொலைதொடர்பு நிலையங்கள் எனப்படும் 16 எப்பலோ நிலையங்கள், இதற்கென ஏற்படுத்தபபட்டுள்ளன.
குற்றச்செயல்கள், மோதல்கள், வாகன விபத்துகள் ஆகியவற்றை பொலிஸ் நிலையங்களுக்கு நேரடியாக பெற்றுக்கொடுக்கப்படுவதுடன், ஏனைய தொலைபேசி அழைப்புகளை இந்த எப்பலோ நிலையங்களுடாக வழங்கப்படுகின்றன. 6 மணித்தியாலங்களுக்குள் கிடைக்கப்பெறும் அவசர அழைப்புகளுக்கென மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக, இப்பிரிவு தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்கும்.
நாளொன்றுக்கு இப்பிரிவிற்கு சுமார் 7 ஆயிரம் தொலைபேசி அழைப்புகள் கிடைப்பதாக, அப்பிரிவின் பணிப்பாளர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார். இதுவொரு சாதாரண பணியல்ல. இந்த ஒரு பாரிய பணியை துஷ்பிரயோகம் செய்யும் பலர், எம்மத்தியில் இல்லாமல் இல்லை. சிலர் பழிவாங்கும் நோக்கில், இவ்விலக்கத்தை பயன்படுத்துகின்றனர். மேலும் சிலர் தேவையற்ற விடயங்களுக்கும் இவற்றை பயன்படுத்துகின்றனர். இவற்றின் மூலம் பொது மக்களுக்கு மிக அத்தியாவசியமான சேவையொன்றையோ அல்லது தேசிய பாதுகாப்பை கருதி மேற்கொள்ள வேண்டிய சேவையொன்றையோ புரிவதற்கு ஒதுக்கப்படும் காலம் வீணடிக்கப்படுகிறது. இதற்கு சிறந்த உதாரணம், நேற்றுமுன்தினம் தினத்தில் அவசர தொலைபேசி அழைப்பு பிரிவிற்கு கிடைத்த போலியான தொலைபேசி அழைப்பாகும். இதன்காரணமாக, கம்பஹா பகுதியில் 5 நீதிமன்றங்களை மூடிவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த அவசர தொலைபேசி அழைப்பை முறைகேடாக பயன்படுத்துவோருக்கு எதிராக, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென, பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்..
No comments:
Post a Comment