Tuesday, August 28, 2012

சட்டத்தின் அடிப்படைகளை மறந்த ரணில் – மைத்திரி.

ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் செப்-8 தேர்தல் நடவடிக்கைகளில் பங்குபற்றக் கூடாது என்று ஐ.தே.க தலைவர் கூறியிருப்பது பாராளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர உள்ளிட்ட 100க்கும் உறுப்பினர்களைப் பாதிக்கும் எனவும், இதற்கு எதிராக இடைக்காலத் தடையுத்தரவு பெற நீதி மன்றத்தை நாடவேண்டி வரும் என்று சட்டத்தரணியும் தென்மாகாண சபை உறுப்பினருமான மைத்திரி குணரட்ன தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை சந்தேக நபர்கள் நிரபராதிகளே. பேச்சுச் சுதந்திரத்தை அரசியல் அமைப்பு வழங்கி இருக்கின்றது. இந்த சட்டத்தின் அடிப்படைகளையே ரணில் மறந்துவிட்டார் என்று திரு குணரட்ன த ஐலண்டுக்கு தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com