அமெரிக்கா மற்றும் இந்தியாவும் கடின பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்ற முயற்சித்து வருகின்றன என்று தேசபக்த தேசிய அமைப்பின் தலைவர் கலா. குணதாச அமரசேகர கூறுகின்றார். மனித உரிமைக் குற்றச் சாட்டைச் சுமத்தி அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் பொருளாதார சுரண்டலை மேற்கொண்டு, இந்தியாவை நமது நாட்டுக்கு எதிராக சதி செய்வதற்கு தீவிரப்படுத்தியுள்ளன.
ஏற்பட்டிருக்கும் பயங்கர நிலையை கண்டு பெரும்பான்மை இனம் துரிதமாகச் செயல்பட வேண்டும். இந்த நிலையைக் கண்டும் அரசாங்கமும் சகல அரசியல் கட்சிகளும் அமைதியாக இருப்பது தேசத்துக்கு தூரதிர்ஷ்டம் என்றும் அன்று தீவிரமாகச் செயல்பட்ட ஜாதிக பலவேகய இன்று இத்தயைபிர்ச்சினைகளைக் கண்டும் செயலற்று இருப்பது ஏன் என்று கேட்க வேண்டியுள்ளது.
சதிகாரர்கள் முயற்சி செய்வது எந்த விதத்திலாவது பேரழிவை உண்டாக்கி அரசைக் கொண்டு 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி இந்த நாட்டில் ஈழ இராச்சியத்துக்கு பாதை அமைத்துக் கொடுப்பதற்குத்தான் என்றும் அவர் கூறினார். மகிந்த ராஜபக்ஷ நாட்டைக் காட்டிக் கொடுக்க மாட்டார் என்று நினைத்தோம். நடப்பதைப் பார்த்தால் அது வீணாகிவிடும் போல் தெரிகிறது என்றும் அம்மரசேகர குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment