மக்களின் மனங்களை வெல்வதே தற்போது படையினர் முன் நிற்கும் கடமை. கோத்தபாய
வன்னி படைத்தளத் தலைமையகத்திற்கு இன்று விஜயம் செய்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, படைத்தளத்திலுள்ள அதிகாரிகள் மற்றும் வீரர்கள் மத்தியில் உரையாற்றியபோது, நாட்டின் பயங்கரவாதத்தை ஒழித்து உலகிற்கு எமது திறைமையை காட்டிய உங்கள் முன் இன்று நிற்கும் கடமை யாதெனில் இங்குள்ள மக்களின் மனங்களை வெல்வதே ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து பேசிய அவர் படைவீரர்களின் வாழ்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் தங்களால் முடிந்த சகலவற்றையும் செய்யும் எனவும் படைவீரர்களின் குழந்தைகளுக்கென கொழும்பு மற்றும் குருநாகலில் இரு பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் நடவடிக்கைகளின்போது அங்கவீனர்களான படைவீரர்களுக்கென ஹம்பகாவில் 60 வீடுகளை கொண்ட வீட்டுத்திட்டம் ஒன்றும் ரத்னபுரவில் 100 வீடுகளை கொண்ட வீட்டுத்திட்டம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதெனவும் அது அடுத்தவாரம் அவர்களிடம் கையளிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment