டெங்கு காய்ச்சலை ஒரு மணித்தியா லத்திற்குள் கண்டுபிடிக்க புதிய கருவி ஒன்றை இறக்குமதி செய்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தென் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள இக்கருவி முதற் கட்டமாக கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையிலும், ஐ.டி.எச். வைத்தியசாலையிலும் பயன்படுத்தப்படவுள்ளதாகவும், இத் திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் பயன்படுத்தப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்துவதற்கு தற்போது குறைந்த பட்சம் இரண்டு நாட்கள் தேவைப்படுவதாகவும், இதனை இலகுவாக்குவதற்காகவே இக்கருவி கொந்வனவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment