1948 - 2005 க்கு இடைப்பட்ட காலத்தில் கிழக்கு மாகாண அபிவிருத்திக்காகச் செய்யப்பட்ட செலைவைவிட அதிக தொகையான ரூபா 53 மில்லியனை போருக்குப் பின்னர் கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக கிழக்கின் உதயம் திட்டத்தின் கீழ் அரசு செலவழித்துள்ளது என்று கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் ராஜித செனவிரத்ன மகாவலி மையத்தில் இடம் பெற்ற ஊடக மாநாட்டில் கூறியுள்ளார்.
வரலாற்றிலேயே தற்பொழுது இடம் பெற்றுவரும் தேசிய மற்றும் கிராமியமட்ட அபிவிருத்திகளை மக்கள் உணரத் தலைப்பட்டுவிட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.
பன்னாட்டு வானூர்தி நிலையம், துறைமுகங்கள், பெருந்தெருக்கள் மட்டுமின்றி கிராமிய மட்டத்தில் நீர் வசதி, மின் வசதி, கிராமிய தெருக்கள் அபிவிருத்தி, பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகள் போன்றவை முன்னெப்போதும் இல்லாத வகையில் முன்னேற்றப்படுத்தப்பட்டு வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் பைசல் முஸ்தபா மற்றும் கொழும்பு மாவட்ட பா.உ. பிரபா கணேசனும் இவ்வூடக மாநாட்டில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment