Saturday, August 4, 2012

அந்த நிறுவனத்திடம் இனி டீசல் கொள்வனவு செய்யவே மாட்டோம்!

தரக்குறைவான டீசல் தொடர்பான மூன்று உறுப்பினர் குழு விசாரணையின் பெறு பேற்றின் அடிப்படையில் தவறிழைத்தவர் எனக் காணப்படுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெற்றோலிய வளத்துறை அமைச்சர் கூறியுள்ளதாக அமைச்சின் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது. கடந்தமுறை இவ்வாறான நிகழ்வுகளை அடுத்து பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவி விலகச் செய்ததோடு அமைச்சரின் பணிப்புரைக் கேற்ப வர்த்தக முகாமையாளரும் பதவி இடைநிறுத்தம் செயப்பட்டார்.

ஸ்ரீலசுக ஊடக மாநாட்டில் கருத்து தெரிவித்த அமைச்சர் பிரியதர்சன யாப்பா, ஆகக் குறைந் விலை மனு கொடுத்தவர்களிடமிருந்து டீசலைப் பெற்றிருப்பதாக விடயத்துக்கான அமைச்சர் பிரேமஜயந்தவின் கூற்றிலிருந்து அறிய முடிவதாகக் கூறினார். இதே வேளையில் இத்துறை நிபுணர்கள் கூறுகிறார்கள் மண்ணெய் அல்லது மசகு எண்ணெய் கலக்கப்பட்ட தரக்குறைவான டீசல் இது என்று. எரிபொருளின் தரத்தை சரிபார்க்கும் முழுப பொறுப்பையும் இபெகூ மேற்கொள்வதை விட அந்தப் பொறுப்பு சுதந்திரமான அமைப்பிடம் விடப்பட வேண்டும் என்று ஒரு நிபுணர் கூறினார். சர்ச்சைக்குரிய கையிருப்பு டீசல் ஏற்கனவே தடை செய்யப்பட்ட ஒரு நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செயப்பட்டதென்றும் இந்த இறக்குமதியில் மோசடி உள்ளதென்றும் இபெகூ தொழிற் சங்கமான ஜாதிக சேவக சங்கத்தின் செயலாளர் ஆநந்த பாலித்த குற்றம் சுமத்துகின்றார். பல ஆண்டுகளுக்கு முன்பு மோசடி காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த இந்த நிறுவனம் ஏன் பதிவுப் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. இதனால், சுதந்திர கண்காணிப்புக் குழுவும் ஏதோ மோசடியில் ஈடுபட்டுளது என்றுஅவர் மேலும் குறிப்பிட்டார்.

சிக்கல்களை ஏற்படுத்திய டீசல் கொள்வனவு செய்யப்பட்ட நிறுவனத்திடம் இருந்து இனி டீசல் கொள்வனவு செய்யப்பட மாட்டாதென கனியவள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். குறித்த நிறுவனத்திடம் டீசல் கொள்வனவு செய்யாதிருக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதென அவர் குறிப்பிட்டார்.

தரக்குறைவான டீசல் பாவனையால் வாகனங்கள் பழுதடைந்தமை குறித்து இதுவரை 150 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதென அமைச்சர் தெரிவித்தார். தரக் குறைவான டீசல் இறக்குமதி இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயவர்த்தனவின் அனுமதியின் கீழ் இடம்பெற்றதென அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குற்றம் சுமத்தினார். எனினும் இது குறித்து அத தெரணவிடம் கருத்து வெளியிட்ட ஹெரி ஜயவர்த்தன, தரக்குறைவான டீசல் இறக்குமதி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் அனுமதியுடன் இடம் பெற்றதென குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com