Wednesday, August 8, 2012

அமெரிக்க ஜே க்ரூ நிறுவனம் இலங்கை ஆடைக் கொள்வனவுக் கட்டளையை நிறுத்தியது.

இலங்கையின் மிராய் நிறுவனம் தனது நிறுவனத்தின் ஊழியர்களின் தொழிற் சங்க உரிமைகள் மீறுவதனால் நிறுவன ஒழுக்க விதிகளை மீறியுள்ளதாக குற்றம்சாட்டி அமெரிக்க ஜே. க்ரூ நிறுவனம் இனி இலங்கையின் தயாரிக்கப்பட்ட ஆடைகளை இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளது.

இலங்கை வரலாற்றில் பெரிய தேசிய நிறுவனமொன்று இலங்கை நிறுவனத்துக்கு வழங்கிய கட்டளையை அகற்றிய முதலாவது சம்பவம் இது வென்று தொழிற்சங்கம் கூறுகின்றது. இந்த தீர்மானம் இலங்கை அதிகாரிகளுக்கு பாரிய இழப்பு என்று அது தொடர்பாக அறிக்கையொன்றை விடுத்த ஜெனிவாவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இன்டஸ்ட்ரீஓல் கோள தொழிற் சங்கம் கூறுகின்றது.

எவ்வாறாயினும் ஜே. க்ரு நிறுவனத்தின் இந்த தீர்மானத்துக்கான காரணம் தொழிற் சங்கத்தின் செயற்பாடே என்று கூறும் இலங்கை சேவை சம்மேளனத்தின் குற்றச்சாட்டை நிராகரிக்கும் இன்டஸ்ட்ரீ ஓல் கோள தொழிற்சங்கம் அந்த தீர்மானத்துக்கான முக்கிய காரணம் இந்த பிரச்சினையை பேச்சு வார்த்தை அடிப்படையில் தீர்த்துக்கொள்வதை சுதந்திர வர்த்தக வலயத்தின் பழைய நிறுவனமான மிராய் நிறுவனம் நிராகரித்தமையே என்று ஜே க்ரூ நிறுவனம் தெளிவாக அறிவித்துள்ளதாகத் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment