தற்போது ஜனநாயகம் கிடைத்துள்ளது. தமிழ் மக்கள் நாட்டை விட்டுப் போகக் கூடாது – மனோ கணேசன்.
தமிழ் மக்கள் சட்டமுரணாக அவுத்திரேலியா மற்றும் நாடுகளுக்குச் செய்ய முயற்சிக்காது, நாட்டிலேயே இருந்து தமது உரிமைகளுக்காக போராட வேண்டும். முன்பு போல அல்லாது நமது உரிமைகளுக்காகப் போராட தற்போது கொஞ்சம் ஜனநாயக இடம் கிடைத்துள்ளது என்று கூறுகிறார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்.
தமிழ் மக்களைப் பொறுத்தளவில், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்ற நிலைமைகள் இன்னும் காணப்படுகின்றன. ஆனால், இங்கேயே தங்கியிருந்து தமது உரிமைகளுக்காக ஜனநாயக கட்டமைப்புக்குள் போராடுவது தான், தமிழ் மக்கள் தாங்கள் இங்கு வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்குவதற்கான ஒரே வழிமுறையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். .
மேலும் படிப்படியாக கிழக்கு மாகாணத்தில் சில மாவட்டங்களிலும் மன்னாரிலும் தமிழ் மக்களின் காணிகளைக் கபளீகரம் செய்து தமிழ் மக்களின் தொகையைக் குறைப்பதற்கு அரசாங்கம் முனைவதை சிலபல சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன என்ற குற்றச்சாட்டை வைத்த அவரிடம் அது தொடர்பான விபரங்களை வெளியிடுமாறு ஊடகவியலாளர் வினவியபோது நிகழ்வுகள் தொடர்பாக பின்னர் சாட்சியங்களுடன் வெளிப்படுத்தப்படும் என்று குறி மறுத்துவிட்டார் நம்ப ஆள்.
0 comments :
Post a Comment