மன்மோகன் சோனியா வீட்டை முற்றுகையிட படையெடுப்பு. பாதுகாப்புக்கு பொலிஸார் குவிப்பு
நிலக்கரி சுரங்க ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் என்று கோரி, கடந்த சில நாட்களாக பாராளுமன்றத்தை பா.ஜனதா முடக்கி வருகிறது. இந்நிலையில் புதுடெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் வீட்டிற்கு அன்னா ஹசாரே குழுவை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக சென்று காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா ஆகியவற்றிற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா ஆகிய இரு கட்சிகளும் கை கோர்த்து செயல்படுவதாக குழுவை வழி நடத்தி செல்பவர்களில் ஒருவரான கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறியுள்ளார்.
எனினும் இவ்எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முடக்கும் வகையில் பல இடங்களில் தடுப்புகள் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்ததுடன் பிரதமர் வீட்டிற்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
மேலும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி மன்மோகன்சிங் , சோனியா வீட்டை அன்னா குழு முற்றுகையிட தடை
மீறினால் சட்டப்படி நடவடிக்கை என போலீஸ் எச்சரிக்கையும் செய்துள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல்
பிரதமர் மன்மோகன்சிங்இ நிலக்கரித்துறையை தன்வசம் வைத்திருந்த கால கட்டத்தில் நிலக்கரி சுரங்கங்களை ஏல முறையில் விற்பனை செய்யாமல், நியமன முறையில் தனியாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்காரணமாக மத்திய அரசின் கஜானாவுக்கு இந்திய ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தலைமை கணக்கு தணிக்கையர் அறிக்கை அளித்திருப்பது பெரும்புயலை கிளப்பியுள்ளது.
ஆனால் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிற மாநிலங்களின் முதல்-மந்திரிகள்தான் ஏல முறைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும்இ இதுகுறித்து அவர்கள் எழுதிய கடிதம் தங்கள் வசம் இருப்பதாகவும் மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டது.
அன்னா குழு போராட்டம்
இதைத்தொடர்ந்து நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் இந்திய ரூ.1.86 லட்சம் கோடியை சுருட்டுவதற்கு காங்கிரசும், பாரதீய ஜனதாவும் கைகோர்த்து செயல்பட்டுள்ளதாக அன்னா ஹசாரே குழுவை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.
நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்இ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்இ சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் ஜந்தர்மந்தரில் காலை 10 மணிக்கு கூடி தர்ணா போராட்டம் நடத்திவிட்டு தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங்இ பாரதீய ஜனதா கட்சி தலைவர் நிதின் கட்காரி ஆகியோரின் வீடுகளை முற்றுகையிடப்போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வியாழக்கிழமை அறிவித்தார். ஆனால் கட்காரியின் வீட்டை முற்றுகையிடுவதற்கு அன்னா ஹசாரே குழுவில் இடம்பெற்றிருந்த கிரண் பெடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சோனியாஇ முதல்-மந்திரிகள் வீடு
இந்த நிலையில் அன்னா ஹசாரே குழுவினர் தங்களது போராட்டத்தை திடீரென விரிவுபடுத்தி நேற்று அறிவிப்பு வெளியிட்டனர். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட அறிவிப்பில்இ டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திஇ சத்தீஷ்கார் முதல்-மந்திரி ராமன்சிங்இ மத்தியப்பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சவுகான் (பாரதீய ஜனதா)இ ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் (பிஜு ஜனதாதளம்) ஆகியோரின் வீடுகளையும் இன்று முற்றுகையிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடல்
பிரதமர் மன்மோகன்சிங்இ காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திஇ பாரதீய ஜனதா தலைவர் நிதின்கட்காரி ஆகியோரின் வீடுகளை முற்றுகையிடப்போவதாக அன்னா ஹசாரே குழுவினர் அறிவித்துள்ளதால்இ இவர்களின் வீடுகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள சென்ட்ரல் செயலகம்இ உத்யோக் பவன்இ பட்டேல் சவுக்இ ரேஸ் கோர்ஸ்இ ஜார்பாக்இ கான்மார்க்கெட் மெட்ரோ ரெயில் நிலையங்கள் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த தடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மெட்ரோ ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
உறுதிமொழிகடிதம் கேட்கிறது
இதற்கிடையே பிரதமர் மன்மோகன்சிங்இ பாரதீய ஜனதா தலைவர் நிதின்கட்காரி வீடுகளை முற்றுகையிடமாட்டோம் என்று அன்னா ஹசாரே குழுவினர் போலீசிடம் உறுதிமொழி கடிதம் அளித்தால்தான் ஜந்தர்மந்தர் தர்ணா போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி அளிக்கும் என தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லி கூடுதல் போலீஸ் கமிஷனர் கே.சி.திவிவேதி கூறுகையில்இ 'தர்ணா போராட்டத்தில் பங்கேற்கிற ஒவ்வொருவரையும் கட்டுப்படுத்தும் இடத்தில் உள்ள நிர்வாகி ஒருவரிடம் இருந்து போலீசுக்கு புதிய உறுதிமொழிக்கடிதம் தேவைப்படுகிறது'' என கூறி உள்ளார்.
அன்னா குழுவுக்கு திவிவேதி எழுதியுள்ள கடிதம் நேற்று ஹபேஸ்புக்' சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மன்மோகன்சிங்இ பாரதீய ஜனதா தலைவர் நிதின் கட்காரி வீடுகள் அமைந்துள்ள பகுதிகள் தடை செய்யப்பட்டுள்ள பகுதிகள் எனவும்இ தடையை மீறுவோர் சட்டப்படி நடவடிக்கையை சந்திக்க வேண்டியதுவரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தடையை மீற முடிவு
இருப்பினும் அன்னா ஹசாரே குழுவினர் தங்கள் முடிவை மாற்றப்போவதில்லைஇ தடையை மீறுவார்கள் என்று தெரியவந்துள்ளது. இதன்காரணமாக டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment