Wednesday, August 15, 2012

ஒருவாரத்தில் "அலுகோசு"களுக்கு நியமனம் வழங்கப்படும்

தூக்குத் தண்டனை நிறைவேற்றும் (அலுகோசு) ஊழியர்களுக்கு ஒருவாரத்தில் நியமனம் வழங்கப்படுமென சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சின் செயலாளர் திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதை இடை நிறுத்தி வைத்திருந்ததன் காரணமாக அப்பதவியில் இருந்தவர்கள் ஓய்வு பெற்றதன் பின் புதியவர்கள் நியமிக்கப்படவில்லை. இதனையடுத்து அண்மையில் கோரப்பட வர்த்தமானி அறிவித்தலின்படி 80 பேர் இப்பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர் எனவும், இவர்களில் இருவர் தகுதி அடிப்படையில் நேர்முகப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டு ஒருவர் கண்டி போகம்பறை சிறைச்சாலைக்கும் மற்றவர் வெலிக்கடை சிறைச்சாலைக்கும் நியமனம் செய்யப்படவுள்ளனர் எனவும், இவர்களுக்கான நியமனங்கள் இன்னும் ஒருவாரத்தில் வழங்கப்படுமென சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சின் செயலாளர திசாநாயக்கா தெரிவித்தார்.

அத்துடன் போகம்பறை மற்றும் வெலிக்கடைச் சிறைகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 844 பேர் இருக்கின்றனர் எனவும் இவர்களில் 19 பேர் பெண்கள் எனவும் மரணதண்டனை நிறைவேற்றுவதை துரிதப்படுத்தும் விடயமாகவே அல்கோசுகள் விரைவில் நியமனம் செய்ய உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com