Friday, August 10, 2012

நாட்டை நிர்வகிக்க முடியாது என்றால் என்னிடம் தரவும் - ஜனாதிபதியிடம் ரணில்

பொருளாதாரம், கல்வி, பங்குச் சந்தை, தரமற்ற எரிபொருள், அநியாயம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் அழுகி நாற்றமெடுத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க முடியாது என்றால் நாட்டை என்னிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டுக்குப் போய்விடுங்கள் என்று எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைக் கேட்டிருக்குகிறார்.

நாட்டில் நாள்தோறும் அதிகரித்து வரும் மனிதக் கொலைகள், பெண்கள் பாலியல் வன்புணர்வு, சிறுவர் துஷ்பிரயோகம் தனியாக ஒழித்துவிட முடியாது என்று ஊடக நிறுவனங்களின் தலைவர்களை அழைத்துப் பேசிய போது ஜனாதிபதி கூறியிருக்கிறார். அதன் மூலம் தனது இயலாமையை, செயற்றிறன் இன்மையை, திறமையின்மையை ஏறுக் கொள்ளும் அரசாங்கம் இனிமேலும் மக்களை இடுக்கு முடுக்கான கஷ்டத்தில் ஆழ்த்திக் கொண்டிருப்பதற்கு இடமளிக்க முடியாது என்று விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

No comments:

Post a Comment