இராணுவ முகாம்களை மீள அமைப்பீர்! கரவெட்டியில் ஆர்ப்பாட்டம்!
அண்மையில் கரவெட்டி கலிகைச் சந்தியில் அமைந்திருந்த இராணுவ முகாமொன்று அகற்றப்பட்டுள்ளது. அகற்றப்பட்ட சோதனைச்- சாவடியை மீள அமைக்ககோரி பிரதேச மக்கள் நேற்று முன்தினம் ஆர்பாட்ட பேரணி ஒன்றை மேற்கொண்டுள்ளனர். சுமார் 50 கிராம மக்கள் இணைந்து பேரணியாகச் சென்று வடமராட்சி பிரதேச சபைச்காரியாலயத்தில் சுமார் 200 பேர்வரை கையொப்பமிட்ட மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
மகஜரின் பிரதி 521 ம் படையணியின் தளபதி கேணல் ரிகிரி திஸாநாயக்கவிடமும் கையளிக்கப்பட்டுள்ளது.
மகஜரில் முகாம் உடனடியாக மீள நிறுவப்படவேண்டும் எனக்கோரப்பட்டுள்ளது.
குடாநாட்டில் இராணுவ முகாம்கள் வாபஸ்பெறப்பட்ட இடங்களில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளமையே இதற்கு காரணம் என அறியப்படுகின்றது.
0 comments :
Post a Comment