தமிழ் தேசியக் கூட்டமைப்பை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வருவதற்கு எந்த வெளியாரின் உதவியும் தேவையில்லை என்றும், உண்ணாட்டு விடங்களில் வெளிநாட்டுத் தலையீடு அவசியமில்லையெனவும், வெளிவிவகார அமைச்சர் ஜி. எல்.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
போருக்குப் பின்னரான இலங்கையின் இணக்கப்பாட்டுக்கு உதவத் தயார் என்று அண்மையில் தென்னாபிரிக்க அரசியல்வாதிகள் விருப்பம் தெரிவித்திருந்தனர். தென்னாபிக்காவின் இந்த அழைப்பு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இயங்கும் எல்.ரி.ரி.ஈயின் குழுவினரின் செல்வாக்கிற்கு உட்பட்டதாக இருக்கலாம் என நம்பப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment