சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்த்ரேலியா செல்லும் அகதிகளை யேரசர மற்றும் பப்புவா நியூக்கினி ஆகிய தீவுகளில் தற்காலிகமாக தங்க வைப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை ஆதரவு வழங்காது என ஐக்கிய நாடுகள் சபையின்Richard Towle அகதிகளுக்கான பிராந்திய உயர் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்த்ரேலியாவிற்கு படகு மூலம் சட்டவிரோதமாக செல்லும் அகதிகளை யேரசர மற்றும் பப்புவா நியூக்கினி ஆகிய தீவுகளில் தற்காலிகமாக தங்க வைப்பதற்கு அவுஸ்த்ரேலிய நாடாளுமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் குறித்த தீவுகளில் அகதிகள் தங்கவைக்கப்படுவதனால் அவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான பிராந்திய உயர் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment