மட்டக்களப்பில் விமான நிலைய நிர்மாண பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
2012 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் உள்ளுர் விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வ தற்காக முன்மொழியப்பட்ட பிரேரணை களின் பிரகாரம், மட்டக்களப்பில் விமான நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.
ஆயிரத்து 700 மீட்டர் நீளமான ஓடுபாதை, வீதிகள், விமானம் தரையிறங்கும் பகுதி, உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்துவதற்காக 800 மில்லியன் ரூபா செலவில் நிர்மாண பணிகள் இடம்பெறவுள்ளன.
20 மில்லியன் ரூபா செலவில் பயணிகள் தங்கியிருக்கும் பகுதி நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் மேற்பார்வையில் இப்பணிகள் இடம்பெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment