பிரதி அமைச்சரை பங்களாவிலிருந்து வெளியேற உத்தரவு.
அனுராதபுர கட்டிடத் திணைக்களத்திற்கு சொந்தமான பங்களா ஒன்றில் தங்கி யிருந்த பிரதி அமைச்சர் வீரகுமார திஸாநாயக்க மற்றும் அவரது ஆதரவாளர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறவேண்டுமென தேர்தல்கள் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு சொந்தமான குறிப்பிட்ட பங்களாவிலிருந்து கொண்டு தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்வது தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக அமைந்துள்ளது என மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்து இவ்உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment