அலுகோசு தேவையா? இலவசமாக நான் செய்கின்றேன். முன்னாள் படைவீரன்.
தனது 26 வயது மகள் நிசாதி புத்திகவைக் கற்பழித்துப் படுகொலை செய்த கொலையாளி உட்பட, அனைத்து மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளையும் தூக்கிலேற்றும் அலுக்கோசு வேலையை சம்பளமின்றி செய்வதற்கு விரும்புவதாக, படை நடவடிக்கையின் போது காயத்துக்கு உள்ளாகிய முன்னால் கெமுனு வாட்ச் பிரிவைச் சேர்ந்த ளு. மு. னு. சோமவீர தெரிவித்துள்ளார்.
இலங்கை வாழ்வதற்கேற்ற அமைதியான நாடாக இருக்கவேண்டுமானால், கொலையாளிகளை தூக்கிலிடுவது அவசியம் என்று அவர் த ஐலண்டுக்குத் தெரிவித்துள்ளதுடன், சமீபத்தில் சிறைச்சாலை ஆணையாளர் பி. டப். கொடிப்பிலிக்கு அவர் மேற்கண்டவாறு கடிதம் எழுதியுள்ளார்.
வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அவரது மகள் கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். குறித்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சமந்தா திலகசிரி அல்லது வடே சுதாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அவர் தறபோது வெளிக்கடைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment