Tuesday, August 14, 2012

ஒழுக்கம் இல்லாவிட்டால் அபிவிருத்தியின் மூலம் பயன் கிடைக்க போவதில்லை - ஜனாதிபதி

நாட்டில் எந்தளவு பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்ட போதிலும், இளம் சந்ததியினர் ஒழுக்க விழுமியங்களை பின்பற்றி செயற்படாத பட்சத்தில் அபிவிருத்தியின் பயன்கள் கிடைக்க போவதில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாரிய அபிவிருத்திகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும், இவை அனைத்தும் இளம் சந்ததியினருக்காவே மேற்கொள்கின்றன எனவும், இவர்களை சிறு பராயம் தொடக்கம் ஒழுக்கம் நெறிகளை பின்பற்ற கூடியவர்களாக மாற்றியமைக்கப்பட வேண்டுமெனவும், இதனை தனியாக அரசாங்கத்திற்கு மாத்திரம் புரிய முடியாது, எனவே அனைவரினதும் ஒத்துழைப்பு இதற்கு அத்தியவசியமாகுமெனவும், இல்லாதபட்சத்தில் சமூக சீர்கேடுகளை தவிர்க்க முடியாத நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment