என்மீது சேறு பூசுங்கள் பரவாயில்லை! அவர்களுக்கு எதிராக விசாரணை வேண்டாம். ஜனாதிபதி
என்மீது சேறு பூசினால் பரவாயில்லை. அவர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பொலிஸ் மா அதிபர் என். கே. இலங்க கோனுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி மீது வசைமாரி பொழிந்தார்கள் என்று எம்.பி.மார் உட்பட, பல பிரதேச அரசியல் வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக அறிந்த ஜனாதிபதி இவ்வாறு அறிவுரை வழங்கியுள்ளார்.
தான் முதிர்ச்சியடைந்த அரசியல்வாதியென்றும், வசைபாடுபவர்கள் மீது மிகுந்த அனுதாபம் காட்டுவதாகவும் கூறியுள்ள அவர், அப்பாவிப் பொது மக்கள், அரச ஊழியர்கள் மற்றும் வர்த்தகர்களுக்குச் செய்யும் அவமதிப்புகளுக்கு விசாரணை நடாத்தி உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், அவர் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
0 comments :
Post a Comment