ஊர்காவல் படையினருக்கும், குடிமக்கள் பாதுகாப்புப் படையினருக்கும் ஓய்வூதியம் வழங்குவதற்கு பாதுபாப்பு அமைச்சரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்த அமைச்சவைப் பத்திரத்தை அமைச்சரவை ஏற்றுக் கொண்டுள்ளது. அது சம்பந்தமாக ஆவன செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளார்கள்.
சில நாட்களுக்கு முன்பு செங்கல் வெட்டுதல், மீன்பிடித்தல் மற்றும் கூலி வேலைகளில் இவர்கள் ஈடுபடுத்தப் பட்டிருந்ததாக செய்திகள் வெளியாது தெரிந்ததே.
அத்துடன் லத்தீன் அமெரிக்காவில் (தென்னமெரிக்கா) உள்ள 33 நாடுகளில் 20 நாடுகளில் மாத்திரமே இலங்கைக்கு இராஜதந்திர உறவுகள் உள்ளன. எனவே வெளிநாட்டமைச்சர் ஜீ. எல் பீரிசின் முன்மொழிவுகளுக்கு அமைய எஞ்சிய 13 நாடுகளிலும் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அத்துடன் இலங்கை மற்றும் சீசெல்ஸ் குடியரசுக்கிடையிலான கல்விப் பரிமாற்றம் சம்பந்தமான கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனாவின் அமைச்சரவைப் பத்திரத்துக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment