ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகளுக்கான ஆணையாளர் நாயகம் நவனீதம்பிள்ளையின் இலங்கைச் சுற்றுலாவுக்கு இடையில் அல்லது அதற்கு முன்னால் தமிழர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்று காட்டும் தமிழ் புகழிடக்காரர்களின் நோக்கத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் புலிச் சந்தேக நபர்களைப் படுகொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக சிங்கள நாளிதள் ஒன்று தெரிவிக்கின்றது.
அதன்படி புலிச் சந்தேக நபர்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்தி அதைக் கடமையில் ஈடுபட்டிருக்கும் சிறை அலுவலர்களால் ஏற்படுத்தப்பட்டது என்று காட்டுவதற்கு முயற்சிப்பதாக தகவல் கசிகின்றது என்று அந்தசெய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்பொழுது சிறையில் வைக்கப்பட்டிருக்கும் புலிச் சந்தேக நபர்கள் இருக்கின்ற சிறைகளில் உண்ணாவிரதம் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாவும், கடந்த மாதம் வவுனியாவில் இடம் பெற்றதைப் போன்ற குழப்பத்தை உருவாக்குவதும் அவர்களின் நோக்கமாகுமாம் என்றும் அச்செய்தி கூறுகின்றது.
No comments:
Post a Comment