கையே வைக்கவில்லை என்கிறார் எம்பி
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவின் மனைவி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர், தன் கணவரால் தாக்குதலுக்குள்ளான நிலையில் சிகிச்சைக்காக கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் நேற்று காலை இடம் பெற்றுள்ளது. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார மிரிஹேன பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருமதி ரங்கே பண்டார உடல் ரீதியாக தாக்கப்பட்டள்ளார். ஆனால் பாரிய காயங்கள் ஏற்படவில்லை. நாம் மேலதிக மருத்துவ சோதனைகளை மேற்கொண்டு வருகிறோம் என வைத்தியசாலை வட்டாரமொன்று தெரிவித்தது. எனினும் தான் மனைவியைத் தாக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார மறுத்துள்ளார்.
'நேற்;று காலை வாக்குவாதமொன்று இடம்பெற்றது. அவர் வைத்தியசாலைக்கு சென்று, அவரை நான் தாக்கியதாக பொய்யாக கூறியுள்ளார். அது உண்மையல்ல, அவரை நான் தாக்கவில்லை. அவர் கீழே விழுந்தார். அதை வைத்துதான் நான் அவரை தாக்கியதாக கூறுகிறார் என பாலித ரங்கே பண்டார கூறினார்.
விவாகரத்துக்கு திட்டமிடுகிறீர்களான என கேட்கப்பட்டபோது தனக்கு அவ்வாறான எண்ணம் இல்லை என நாடாளுன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
'கணவன் மனைவிக்கு இடையிலான பிரச்சினை சோறு அவியும் வரைதான் என சிங்கள பழமொழியொன்று உள்ளது. எனவே விவாகரத்து செய்யும் எண்ணம் எனக்கில்லை' எனக் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment