சரத் பொன்சேகாவிற்கு வழங்கியதுபோல் சரத் என் சில்வாவிற்கும் தண்டனை வழங்க வேண்டுமாம்.
சரத் பொன்சேகாவுக்கு செய்தது போல முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்று கூட்டுறவு மற்றும் உண்ணாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிக்கவரட்டி பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது குறிப்பிட்டார். அவர் பிரதம நீதியரசராக இருந்த போது பல தவறான தீர்ப்புகளை வழங்கியுள்ளார். பாராளுமன்றத்துக்கு அருகில் சரத் என். சில்வா காருக்குள் இருந்து கொண்டு ஜோன்ஸ்டன்களுக்கு சேறு பூசுகின்றார்.
அவர் சீஃப் ஜஸ்டிஸ் இல்லை, சீப் இன் ஜஸ்டிஸ். அதாவது தவறான தீர்ப்பு வழங்குகிறவர். அவரைப் போல தவறான தீர்ப்பு வழங்கிய பிரதம நீதியரசர் வரலாற்றில் யாருமே இல்லை. அவருக்கு தண்டனை வழங்காமல் இருக்கிறதற்காக ஜனாதிபதிக்கு அவர் நன்றி சொல்ல வேண்டும் என்று ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ கூறினார்.
0 comments :
Post a Comment