கிழக்குமாகாணசபை வேட்பாளர்களுக்கு வகுப்பெடுத்தார் அரசாங்க அதிபர் அம்மா.
கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழு வேட்பாளர்களை அறிவுறுத்தும் விசேட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சால்ஸ் தலைமையில் இடம்பெற்றது.
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் தேர்தல் அதிகாரிகளும் உயர் அரச அதிகாரிகளும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டதுடன் அவர்கட்கு மாவட்டத்தில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் எதிர்நோக்கும் தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பாகவும் விளக்கி கூறப்பட்டன.
இத்தேர்தலையொட்டி மாவட்ட செயலகம் வாழைச்சேனை பிரதேச செயலகம், வெல்லாவெலி பிரதேச செயலகம் ஆகியவற்றில் 3 தேர்தல் முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளும் பனிமனைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் முறைப்பாடுகளை தெரிவிக்க முடியுமென்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மேற்படி பணிமனைகளில் தமது முறைப்பாடுகள் செய்யமாட்டார்கள் எனவும் ஊடகங்களுடாக தவறான செய்திகளை மக்களுக்கு வழங்கி மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற முனைந்து வருகின்றனர் எனவும் அங்கு சில சுயேட்சைக்குழுக்களால் குறைகூறப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment