அமரிக்கா, ரசியாவுடன் நிதிப்புலனாய்வு புரிந்துணர்வு ஒப்பந்தம்.
சட்டவிரோத பணப்பரிமாற்றத்தை தடுக்க மேற்கொள்ளும் முயற்சி.
இலங்கை மத்திய வங்கியின் நிதிப்புலனாய்வு அலகு (FIU) ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை மங்கோலியா, ரசியா, சவுதி அரேபியா மற்றும் அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ளதாக மேற்படி வங்கி அறிக்கை விடுத்துள்ளது. இதன் ஊடாக இந்த நாடுகள் பணச்சலவை மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல் போன்ற குற்ற சந்தேக நபர்களுக்கெதிராக புலனாய்வு மற்றும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்குத் தமக்குள் நிதி சம்பந்தமாக தகவல்களைப் பரிமாறிக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று அது கூறுகின்றது.
இவர்கள் அனைத்துலக ரீதியாகத் தொடர்புகளைக் கொண்டிருப்பதமாகவும் எல்லைகளுக்கூடாக இயங்குவதாகவும் இவர்களைக் கட்டுப்படுத்த உலக மட்டத்திலான அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் வங்கி கூறுகின்றது.
இதுவரை 20 நாடுகளில் இலங்கை இந்த ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. அவுத்திரேலியா, பெல்ஜியம், வங்காளதேசம், கனடா, இந்தியா, மலேசியா, தென்கொரியா, இந்தோனேசியா, பிலிப்பைன்சு, ஆப்கானித்தான், நேப்பாளம், கம்போடியா, பிஜி, சுலோவேனியா, தென்னிரிக்கா மற்றும் சொலமன் தீவுகளும் இவற்றில் அடங்கும்.
0 comments :
Post a Comment