தருஸ்மன் குழு உறுப்பினர் இலங்கைக்கு எதிராக மீண்டும் ஜெனிவாவிற்கு தயார்.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான்கீமூனுக்கு இலங்கை தொடர்பாக அறிவுரைகள் வழங்குவதற்கு நியமிக்கப்பட்ட தருஸ்மன் குழுவின் உறுப்பினரான யஸமின் சுகா இலங்கைக்கு எதிராக வரும் நவம்பர் மாதத்தில் ஜெனிவா நகரில் நடைபெறும் மனிதவுரிமை கூட்டத்தில் கடும் அழுத்தத்தை பிரயோகிக்க ஆரம்பித்துளார். அவர் இலங்கைக்கு எதிரான வெளிநாட்டு அரச சார்பற்ற அமைப்பான அமைதியும் நீதியும் என்ற அமைப்பின் இலங்கை தொடர்பான அறிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தை ஏற்றுக் கொண்டதன் பின்னர், உரையாற்றிய சுகா, போர்க் குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் செயற்பட்ட விதம் பற்றி மனிதவுரிமை கூட்டத்தின் போது பதிலளிக்க இலங்கை தயாராக இருக்க வேண்டும். அதே போல் போர்க் குற்றங்ங்கள் பற்றி விசாரிக்க பன்னாட்டு விசாரணை அவசியம் என்று கூறியுள்ளார்.
வரும் நவம்பரில் ஜெனிவா நகரில் ஆரம்பமாகும் மனிதவுரிமை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு இலங்கைக்கு இதுவரை அழைப்பு விடுக்கப் படவில்லை. இம்முறை மனிதவுரிமை கூட்டத்தை ஒரே தரப்பாக நடாத்துவதற்கு ஆயத்தமாக இருப்பதாக நம்பப்படுகின்றது.
0 comments :
Post a Comment