Saturday, August 25, 2012

தந்தையிடம் பணம் கேட்டேன் அவர் மறுத்ததால் கொலை செய்தேன்- முக்கொலையாளி

அந்தஸ்துக்கு மீறிய விதத்தில் இரண்டு காதலிகளுடனும் வானங்களுடனும் ஆடம்பர வாழ்க்கை நடத்த முயன்றதால் ஏற்பட்ட விபரீதம்

நேற்று கடவத்தையில் வைத்து கைதுசெய்யப்பட்ட வெள்ளவத்தை முக்கொலையாளி, தான் தந்தையிடம் பணம் கேட்டதாகவும், அவர் பணத்தை கொடுக்க மறுத்ததால் மூவரையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்யவிருந்தேன் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கொட்டகலையில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர் கொழும்புக்கு வந்து மருந்துப் பொருட்களின் விற்பனை பிரதிநிதியாகத் தொழில் புரிந்துள்ளார். அந்தஸ்துக்கு மீறிய விதத்தில் இரண்டு காதலிகளுடனும் வானங்களுடனும் ஆடம்பர வாழ்க்கை நடத்தி வந்த இவர் பணப்பிரச்சினை காரணமாக ஊருக்குச் சென்று தந்தையின் ஊழியர் நம்பிக்கை நிதியப்பணத்தைக் கேட்டுள்ளார்.

தந்தை அதனை கொடுக்க மறுத்ததால் ஆத்திரமுற்ற இவர் தந்தை, தாய், சகோதரி ஆகிய மூவரையும் கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவின் படி மூவரையும் கொழும்புக்கு அழைத்து வந்துள்ளார். தான் ஒரு மருந்துவப் பொருட்களின் விற்பனை முகவர் என்பதால் மிக எளிதாக மூவருக்கும் நஞ்சூட்டியுள்ளார். நஞ்சூட்டிய பின்னர் நான் ஏன் தற் கொலை செய்து கொள்ள வேண்டும்? என்ற எண்ணத்தில் தாயினதும் சகோதரியினதும் தங்கநகைகளை அபகரித்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளார்.

நேற்று சந்தேகநபரை கொழும்பிலிருந்து - குருணாகல் நோக்கிச் சென்ற பஸ்ஸில் பயணித்த நபர் ஒருவர் பத்திரிகைகளில் பிரசுரிக்கப் பட்டிருந்த வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தின் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியின் தொலைபேசி இலக்கத்துக்கு அறிவித்ததையடுத்து கைதுசெய்யப்பட்டிருதார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment