இந்தியாவின் தாளதுக்கு ஆடவேண்டிய அவசியம் எமக்கில்லை. – ஜனாதிபதி.
இலங்கையை பாதிக்கும் எதனையும் இந்தியா செய்யாது என்றும், நமது அயலவரோடுள்ள உறவு மேலும் பரவலாக்கப்பட வேண்டுமெனவும், இலங்கையில் இந்தியாவுக்கு கவர்ச்சி கரமான முதலீட்டு வாயப்புகள் உள்ளதாகவும், இலங்கையின் அணிசேரா கொள்கையை பாதுகாத்துக் கொள்வதில் உறுதி பூண்டுள்ளோம் எனவும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சீன முதலீடுகள் பற்றி இந்தியாவுக்கு சிறிது கவலை இருக்கலாம். ஆனால் இம் முதலீடுகள் வர்த்தக நோக்கமானவை. 30 ஆண்டுகள் எமக்குக் கிடைக்காதிருந்த வெளிநாட்டு முதலீடுகள் தற்போது வரத் தலைப்பட்டுள்ளன. அதனால் இலாபம் தரும் முதலீடுகளை வரவேற்று இலங்கையை உன்னத நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி மற்றும் பலாலி வானூர்தித் தள அபிவிருத்தியை இந்தியா மேற் கொள்கின்றது. ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தியை சீனா மேற்கொள்கின்றது. இந்தியாவில் கபிலவஸ்துவில் இருக்கும் புனித தாதுவை இலங்கையர்கள் வணங்குவதற்காக இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதற்கு மிக்க நன்றி தெரிவிக்கின்றேன் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment