Sunday, August 12, 2012

முன்னாள் புலிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவேண்டும்:– அசோக் மேத்தா.

முன்னாள் எல்ரிரிஈ போராளிகள் மரபுரீதியற்ற போரின் பல துறைகளில் பயிற்சி பெற்று நிபுணத்துவம் கொண்டவர்கள். அவர்கள் யாவருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு அளித்து அவர்களில் தேவையானோரை இராணுவத்தில் இணைத்துக் கொள்வது உண்மையான ஒன்றிணைப்பாக அமையும் என்று கடந் இரண்டு மூன்று நாட்களாக கொழும்பில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான மாநாட்டின் முடிவில் சிலோன் டுடே க்கு கருத்து தெரிவித்த முன்னாள் இந்திய அமைதி காக்கும் படையின் (IPKF) தளபதி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அசோக் குமார் மேத்தா கூறினார்.

கடந்த ஆண்டு இங்கு வந்திருந்தபோது இலங்கை ஐந்து ஆர்களான மீள்கட்டுமானம், மீள்குடியேற்றம், மறுவாழ்வு, மீளொத்துழைப்பு மற்றும் மீளிணக்கப்பாடு (Reconstruction, Resettlement, Rehabilitation, Reintegration and Reconciliation) என்பவை தொடர்பில் அக்கறை காட்டவில்லையென்று நினைத்தேன். கடந் முறையும் இந்த முறையும் கலந்து கொண்ட நான் இப்போது எனது 90 மூ சந்தேகம் தீர்ந்து விட்டதை உணர்கிறேன். இலங்கை அரசு குறிப்பாக இராணுவம் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தனது நல்லெண்ணத்தைக் காட்டியுள்ளது.

இலங்கை நான்கு ஆர்கள் தொடர்பாக சரியான தடத்தில் செல்கின்றது. ஐந்தாவது ஆறான மீளிணக்கப்பாடு அரசியல் தீர்வு ஊடாகவே எட்டப்பட முடியும். நாட்டைக் கட்டியெழுப்புவதில் இராணுவம் தீவரமாக ஈடுபடுகின்றது. ஆனால் அது பொது மக்களின் வேலை. அதிலிருந்து அது விலகிக் கொள்ள வேண்டும் என்றார் அசோக் மேத்தா.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com