தேர்தலுக்காக இனவாதத்தை தூண்டாதீர் - ஜனாதிபதி
நன்றிக்கடன் மிக்க இலங்கை மக்கள், இனவாதிகளுக்கு நாட்டை தாரை வார்க்க தயாரில்லை. தேர்தலுக்காக இனவாதத்தை தூண்ட வேண்டா மென, ஜனாதிபதி புல்மோட்டையில், பெருந்திரளான மக்கள் மத்தியில் வலியுறுத்தினார்.
மாகாண சபை தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், புல்மோட்டை கனிய வள கூட்டுத்தாபன வளாகத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.
மக்கள் மத்தியில், இனவாதத்தை தூண்டி தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளும் கீழ்த்தரமான முயற்சிகளில் ஒரு சில அரசியல் வாதிகள் ஈடுபடுவதாக, ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இனவாதத்தை தூண்டுவதன் மூலம், மீள நாட்டை பின்நகர்த்தவே, இவர்கள் முயற்சிக்கின்றனர். பயங்கரவாதத்தை ஒழித்து, நாட்டில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், அதனை சீர்குலைக்க எந்த சக்திக்கும் இடமளிக்கப்போவதில்லையென்றும், ஜனாதிபதி வலியுறுத்தினார். புல்மோட்டை மற்றும் குச்சவெளி பிரதேசங்களில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 8 முக்கிய உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும வகையில், கூட்டமைப்பில் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment