ஆசியவின் மிகப்பெரிய மீன்பிடித்துறைமுகம் இலங்கையில் இருப்பது மகிழ்ச்சி - சீசெல்ஸ்
கடற்றொழில் துறையில் ஏற்பட்டுள்ள துரித அபிவிருத்தி காரணமாக இலங்கையில் ஆசியாவின் மிகப்பெரிய துறைமுகம் இருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயம் என சீசெல்ஸ் நாட்டின் முதலீடு, இயற்கை வள மற்றும் கைத்தொழில் துறை அமைச்சர் பீட்டர் ஏ.சி.சினோன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்த சீசெல்ஸ் நாட்டின் அமைச்சர் சீனோன், ஹெந்தளை, திக்கோவிட்ட, கடற்றொழில் துறைமுகத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட போதே இதனை தெரிவித்தார்.
கடந்த வருடம் இலங்கையின் மீன் உற்பத்தி ஒரு இலட்சம் தொன் வரை அதிகரித்ததாகவும் அது பொருளாதார அபிவிருத்திக்கு மிகவும் உந்து சக்தியெனவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதன் போது சுட்டிக்காட்டினார்.
கடற்றொழில் கூட்டுத்தாபன தலைவர் மஹில் சேனாரத்ன, சீனோர் நிறுவனத்தின் தலைவர் சரத் குமாரசில்வா, இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபன தலைவர் உபாலி லியனகே உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment