Saturday, August 25, 2012

ஜெர்மனிய இளைஞர் இலங்கையில் செய்த சாதனை.

கைவிடப்பட்டிருந்த கோழிப் பண்ணை யொன்றை ஒரு சில நாட்களில் புதிய சிறுவர் அபிவிருத்தி நிலையமாக மாற்றியமைத்திருக்கிறார்கள் 14 ஜெர்மனிய இளைஞர்கள். இலங்கையின் மத்திய மலைநாட்டில் பத்தனைக்கு அடுத்துள்ள ஒரு கிராமமானதிம்புலையில் 5 நாட்களில் இந்த அதிசயத்தை செய்து காட்டியிருக்கிறார்கள் அவர்கள்.

யூரேசியா பகுதிக்கான நாசரேன் பக்சான் (paXan) அமைப்பைச் சேர்ந்தவர்களே இதனைச் செய்துள்ளார்கள். கைவிடப்பட்டுச் சிதிலமடைந்திருந்த கோழிப் பண்ணை இப்பொழுது 100 க்கு மேற்பட்ட தோட்டப்புறச் சிறுவரின் வளர்சிக்கான மையமாக மாற்றப்பட்டுள்ளது.

கடவுளுக்குச் சேவைபுரியும் ஒரு கிறிஸ்தவக் குழுவால் மக்களையும், கட்டிடங்களையும் மாற்றியமைக்க முடியும் என்பதை இது காட்டுவதாக அதன் அமைப்பாளர்களில் ஒருவரான சைமன் பாஸ்கேற் கூறுகின்றார்.

இரண்டாவது உலகப் போரின் இறுதியில் துவம்சம் செய்யப்பட்ட ஜெர்மனி ஒரு சில ஆண்டுகளில் வீறுகொண்டு எழுந்தமைக்கு அவர்களின் உழைப்பே காரணம் என்பது யாவரும் அறிந்த உண்மை.

No comments:

Post a Comment