சுகபோகங்ளைத் துறந்து துறவியாகிய பிக்குமார்க்கு தொழில் எதற்கு ? அஸ்கிரிய மகாநாயக்கர்
உலக சுகபோகங்களைத் துறந்து, துறவு வாழ்க்கையை மேற்கொண்ட பிக்கு மார்களுக்குத் தொழில் எதற்கு என்று அஸ்கிரிய பீடத்தின் மகநாயக்கர் அதிவண. உடுகம புத்தரகித்த தேரர் ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பினார். கண்டிக்குச் சென்றிருந்த ஜனாதிபதி கண்டி தலதா மாளிகையில் வழிபாடு நடாத்திவிட்டு மகாநாயக்கரிடம் ஆசிபெறச் சென்றபோதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் பல்வேறு வேலைத் திட்டங்களின் கீழ் பிக்குமார்குக்கு தொழில் வழங்குவது பற்றிக் கலந்துரையாடிய போதே இவ்வாறு கேட்டுள்ளார். மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவே ஸ்ரீ சுமங்கல தேரர் ஜனாதிபதியிடம் கருத்து தெரிவிக்கையில் புத்த சாசனத்தைப் பாதுகாக்கும் சட்டங்களைக் கொண்டுவந்து செயற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
0 comments :
Post a Comment