புலிகளின் தாக்குதலில் காலை இழந்தவர் ஒலிம்பிக்கில் பங்கு கொள்கின்றார்.
எனது ஊன்றுகோலே பயிற்சிக்கான ஒரே சாதனம் – லால் புஸ்பகுமார
இலங்கை ஏழு பேர் கொண்ட குழுவை இலண்டன் பராஒலிம்பிக் போட்டிக்கு அனுப்புகின்றது. அவர்கள் பதக்கம் வெல்ல திடசங்கற்பம் பூண்டுள்ளனர் என்றும், அவர்களின் முயற்சிக்கு உத்தியோக பூர்வ ஒத்துழைப்பு போதியளவு இல்லை என்று பங்குபற்றுபவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் குழுவின் தலைவர் லால் புஸ்பகுமார தெரிவிக்கையில், "பயிற்சிக்காக எனக்குள்ள ஒரே சாதனம் எனது ஊன்றுகோல் மட்டுமே" என தெரிவித்துள்ளார் .லால் புஸ்பகுமார 2008 ல் எல்.ரி.ரி யினரின் தாக்குதலில் தனது இடது காலை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் ஊனமுற்றோருக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரிட்டன் தலைநகர் லண்டனில் இன்று ஆரம்பமாகி செப்டம்பர் 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஒலிம்பிக் போட்டி முடிந்தவுடன் அதே நகரில் பரா ஒலிம்பிக் நடைபெறுவது வழக்கம்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில், சமீபத்தில் 30 வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. இங்கு, 14வது பாராலிம்பிக் போட்டி இன்று ஆரம்பமாகி செப்.9 வரை நடக்கவுள்ளது. இதில் 166 நாடுகளைச் சேர்ந்த 4,200 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
0 comments :
Post a Comment