பாமினி மீது கருணை காட்டும்படி சகோதரி வேண்டுகோள்.
அவுஸ்திரேலியாவுக்கு சட்டமுரணாக இலங்கை அகதிகளை அனுப்பும் ஏற்பாடுகளுக்குத் துணை போனவர் என்ற குற்றச்சாட்டில் சென்னை கியூ பிரிவு பொலசாரால் கைது செய்யப்பட்ட பாமினியை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யுமாறு அவரது சகோதரியான ஈசா அல்லது கமலாம்பிகை என்பவர் மறுவாழ்வு அதிகாரியை வேண்டியுள்ளார்.
தனதும் தனது சகோதரியினதும் ஐந்து பிள்ளைகளைத் தான் பாராமரிப்பதற்கு ஏதும் வழியில்லை என்றும், ஏற்கனவே அவுஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுப் போன தங்கள் கணவன்மார் பற்றிய எந்த தகவலும் இல்லை என்றும், தங்களது ஏழ்மை நிலையை அறிந்து கொண்ட தரகர்மார் 5 அல்லது 6 பேரை ஏற்பாடு செய்து தரும்படி கேட்டதாலேயே இது நடந்ததென்றும், பாமினியை அந்த அமைப்பாளர்களில் ஒருவர் அல்ல வென்றும், தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment