Tuesday, August 14, 2012

இன்டர்போல் தகவல் தளத்துடன் இலங்கைப் பொலிஸ் இணைந்தது.

இன்டர்போல் வலையமைப்பின் முதவாவது ஆசிய நாடக கடந்த வாரம் இலங்கை இணைந்து கொண்டது. இந்த தகவல் தளத்தின் வசதியால் உலகில் 190 நாடுகளில் உள்ள குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து தக்க நடவடிக்கை எடுக்கலாம் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியகட்சருமான அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.

இதன் பயனாக தேடப்படுவோர் பட்டியலிலுள்ள குற்றவாளிகளை எந்தவொரு பன்னாட்டு விமானத்தளம் அல்லது துறைமுகத்தில் இலகுவில் அடையாளம் கண்டு கைதுசெய்ய முடியும் எனவும், இதன் மூலம் அவர்கள் பயன்படுத்தும் தொலைந்த, திருடப்பட்ட அல்லது போலிக் கடவுச் சீட்டுக்கள் அவர்களைக் காட்டிக் கொடுத்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வேறொருவரின் கடவுச்சீட்டை இலங்கையர் பயன்படுத்தினால் உலகின் எந்தவொரு நாட்டிலும் இவர்களை இலகுவில் கண்டுபிடித்துவிடலாம் எனவும். இவ்வாறான தொலைந்த அல்லது களவு போன கடவுச்சீட்டுகளின் இலக்கங்கள் குடியகழ்வு மற்றும் குடிவரவு அதிகாரிகளிடம் இருப்பதனால், இழக்கப்பட்ட கடவுச் சீட்டுக்கள் மீள கிடைத்தாலும் அவற்றைப் பயன்படுத்த முடியாததுடன், புதிய கடவுச்சீட்டுக்களையே பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com