இலங்கைக்கு இராஜதந்திரிகள் விஜயம் செய்வது போன்று எந்த நாட்டிலும் இல்லை.
உயர்மட்ட வெளிநாட்டு ராஜதந் திரிகளின் இலங்கை விஜயத்தினால், தாயகத்திற்கு ஏராளமான நன்மைகள் கிடைத்துள்ளதாக, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் ஒருபோதும் இடம்பெறாத வகையில், ஏராளமான இராஜதந்திரிகள், இலங்கைக்கு வருகை தந்த வண்ணமுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில் மூன்று நாடுகளில் உயர்மட்ட தலைவர்கள், இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். வெளிநாட்டு அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட தலைவர்கள் வடபகுதிக்கு வந்து, இடம்பெற்று வரும் அபிவிருத்திகளை அவதானித்துள்ளனர். அவர்கள், கடந்த மூன்று வருடங்களில் இதுபோன்ற அபிவிருத்திகள், உலகில் எந்தவொரு நாட்டிலும் இடம்பெறவில்லையென,தெரிவித்துள்ளார்.
சீஷெல்ஸ் ஜனாதிபதி, பிரிட்டனின் நேஸ்பி பிரபு, அத்துடன் பிரிட்டனிலிருந்து வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்தியாவின் முக்கிய அமைச்சர்கள் ஐவர், இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் எமது நாட்டின் நிலைமையை ஆராய்ந்து, தங்கள் நாட்டுக்கு எடுத்துரைத்துள்ளனர். அதன் மூலம் வெளிநாடுகள் நமது நாடு தொடர்பாக வைத்திருந்த அபிப்பிராயம் மாற்றமடைந்துள்ளது.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க பிரதி ராஜாங்க செயலாளர் ரொபர்ட் பிளேக், இலங்கைக்கு வருகை தரவுள்ளார். பொதுநலவாய அமைப்பின் பொது செயலாளர் கமலேஷ் ஷர்மா, தாயகத்திற்கு வருகை தரவுள்ளார். சீனா மற்றும் ரஷ்யாவின் உயர்மட்ட தலைவர்கள், இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். அவை சிரிய நாடுகள் அல்ல. எமது நாட்டுக்கு பொருந்தும் வகையிலேயே, பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். வெளிநாடுகளில் திணிக்கப்படும் தீர்வுகளே அல்ல. இது தொடர்பாக சிறந்த புரிந்துணர்வு வெளிநாடுகளில் காணப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment