Saturday, August 18, 2012

மாகாண மேல் நீதி மன்றங்கள் அரச காணிகளைப் பொறுத்தளவில் பேராணை வழங்கலாம்

மேன்முறையீட்டு நீதி மன்றத் தீர்ப்பு.

மேன்முறையீட்டு நீதிமன்றம், சமீபத்திய ஒரு வழக்கில், அரச காணிகள் தொடர்ந்தும் இலங்கைக் குடியரசுக்கு உரிமையுள்ளாக இருக்கும் என்று தீர்ப்பளித்துள்ளது. இலங்கை அரசியலமைப்பின் 154(p) சரத்தின் படி அமைக்கப்பட்ட மாகாண மேல் நீதி மன்றங்கள் அரச காணிகளைப் பொறுத்தளவில் உறுதிகேள் எழுத்தாணை, ஆணையீட்டெழுத்தாணை மற்றும் தடையாணையை வழங்க அதிகார முடையவையாகும்.

அரச காணிகள் அரசுக்கு உரிமையாக இருக்கும் அதேவேளை, அதனைப் பயன்படுத்தல், நிர்வகித்தல் மற்றும் கட்டுப்படுத்தல் மாகாண சபைகளிடம் இருக்கலாம். ஆனால், இது மாகாண சபைகள் அரச காணிகளை உரிமை மாற்ற அல்லது கைப்பற்ற அதிகாரம் கொண்டுள்ளன என்று அர்த்தமல்ல என்று அந்தத் தீர்ப்பு கூறுகின்றது. அரச காணிகள் மாகாண சபைகள் அட்டவணைப் பட்டியலில் உள்ள விடயமாகும் என்றும் மன்றம் கூறியுள்ளது.

இந்த தீர்ப்பானது 2000 திசம்பர் 14 ம் திகதிய மாகாண மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை புறத்தொதுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேன்முறையீடு தொடர்பானதாகும். இந்த வழக்கில் முறைப்பாட்டுக்காரரான எச். எம். ஜோதிபால என்பவர் எதிர்வாதியான வலப்பனை பிரதேச செயலாளர் எம். ஜகதிலக்கவால் வழங்கப்பட்டிருந்த வெளியேற்றக் கட்டளையை நீக்குமாறு உறுதிகேள் எழுத்தாணை வழங்குமாறு கோரியிருந்தார்.

No comments:

Post a Comment