அது, 4 மீட்டர் (13 அடி) உயரமானது. எடை, 4.5 டன். தோற்றம் ரோபோ போலவும் உள்ளது. மோட்டார் பைக்கில் அமர்ந்துள்ள ராட்சத மனிதன் போலவும் உள்ளது.
கீழே குறிப்பிட்ட உருவத்தை கடந்த (திங்கட்கிழமை) காலை இழுத்து வந்து நிறுத்தினார்கள். நிறுத்தப்பட்ட இடம், டோக்கியோவில் அன்று ஆரம்பமாகும் வொண்டர் பெஸ்டிவல். ரோபோ போலீஸ் என்று விளக்கம் கொடுக்கப்பட்ட இதற்கு வைக்கப்பட்டுள்ள விலைப் பட்டியல், 1 மில்லியன் யென்
சரி. ரொபோ போலீஸ் என்ன செய்யுமாம்?
உத்தரவு கொடுத்தால், எந்திரத் துப்பாக்கி போல சுடும்! அதுவும் உங்க வீட்டு சூடு, எங்க வீட்டு சூடு அல்ல… ஒரு நிமிடத்துக்கு 6,000 துப்பாக்கி குண்டுகளை சீறிப் பாயவைக்கும் மெகா சூடு! எதிரே இருப்பவை சல்லடைதான்.
எதிரிகள் இருக்கும் பகுதிக்குள், ரிமோட் மூலம் அனுப்பி வைத்து சுட்டுத் தள்ள அட்டகாசமான இந்த ரோபோ போலீஸ், டீசல் சக்தியில் இயங்குகிறது. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ரிமோட் கன்ட்ரோல் மூலமும் இயக்கலாம் என்பதுடன், மற்றொரு வசதியும் செய்து தருகிறார்கள். அது என்ன தெரியுமா?
3G நெட்வெர்க்கில் உள்ள ஸ்மார்ட் போன் ஒன்றின் மூலமும் இயக்கலாம்!
No comments:
Post a Comment