கெமுனு படையினருக்கு பதக்கம் வழங்கினார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ.
அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 15 ம் திகதி குருவிட்டையில் அமைந்துள்ள கெமுனு வாட்ச் 1ம், 2ம், 3ம் (தொண்டர்) படையினருக்கு "ஜனாதிபதி நிற விருதுகளை" வழங்கி கௌரவித்துள்ளார்.50 ஆண்டு வரலாற்றைக் கொண்ட கெமுனு வாட்ச் படையணி நாட்டிற்கு ஆற்றிய தன்னலமற்ற, விசுவாசம் கொண்ட கௌரவமான சேவைக்காக 1980ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
23 பட்டாலியன்களைச் சேர்ந்த சகல தரத்திலும் உள்ள 17424 பேருகு இது வழங்கப்பட்டது.
ஜனாதிபதி வருகை தந்தவுடன் அவருக்கு 47 அலுவலர்கள் மற்றும் 379 வீர்ர்களும் கொண்ட தொகுதியினரால் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு மற்றும் நகரபிவிருத்திச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் பெருந்தொகையான் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment