காட்போட் வீரரை நம்பி மோசம் போகாதீர்கள் – சரத் பொன்சேகா.
தேசப்பற்றாளர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் காட்போட் வீர்ர்களை நம்பி ஏமாந்து போக வேண்டாம். நான் இந்த நாட்டுக்காக மூன்று முறை இரத்தம் சிந்தியுள்ளேன். நான் பயங்கரவாதிகளிடமிருந்து இரத்தம் சிந்தி காப்பாற்றப்பட்ட நாடு இன்று சில அரசியலவாதிகள் சொத்தாக மாறிவிட்டது. இவர்கள் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையைப் பறித்தவர்கள். இழந்த ஜனநாயகத்தை இவர்களிடம் இருந்து மீட்டெடுப்பது தனது கடமை என்று அம்பலாந்தோட்டையில் நகர மத்தியில் நடைபெற்ற மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசிய முன்னணித் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment