சந்திரிகாவின் மூளையைச் சோதிக்க வேண்டும் – வண. ஞானசார தேரர்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அங்கொடை அல்லது முல்லேரியா போய் மூளையைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என்று வண. கலபடஅத்த ஞானசார தேரர் கூறியுள்ளார். சமீபத்தில், முன்னாள் ஜனாதிபதி "சிஙகள பௌத்தர்களை இந்நாட்டின் சுப்ரீம் இனமாக ஆக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது பயங்கரமாது" என்று கூறிய கருத்துக்கு எதிராகவே தேரர் இவ்வாறு ஆவேசப்பட்டுள்ளார்.
உலக மக்களை நாட்டினர், இனக்குழு என்று இரண்டாகப் பிரிக்கலாம். எந்த நாட்டுக்கும் அந்த நாட்டின் பண்பாட்டு நாகரீகத்தைக் கட்டியெழுப்பியவர்களே உரிமையானவர்கள். இந்த நாடு சிங்கள பௌத்தர்களால் கட்டியெழுப்பப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய முடிக்குரிய குடியேற்ற நாடாக ஆகும் வரை பௌத்தர்களின் நாடாகவே இருந்தது. இப்போது சிஙகள இனம் பற்றிக் கதைப்பவர்கள் இனவாதிக எனப்படுகின்றனர். ஹக்கிமோ சம்பந்தனோ அதையே கதைத்தால அதை இனவாதம் என்று கூறுவதில்லை என தேரர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment