சுரேஸ் பிறேமச்சந்திரன் தலைமையில் யாழ் மாவட்டத்தில் இயங்கிய மண்டையன்குழு தொடர்பாக புளொட்டிலிருந்து தீப்பொறிவரை எனும் தொடர்கட்டுரை ஒன்றில் சிறு பதிவு ஒன்று பதிவாகியுள்ளது. அப்பதிவில் பின்வருமாறு கூறுகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபுறத்தில் ஜனநாயக சக்திகளையும், புத்திஜீவிகளையும், தம்மை விமர்சித்த அல்லது ஜனநாயக விரோதப் போக்குகளை அம்பலப்படுத்தியவர்களையும், தம்முடன் உடன்பாடு காணாதவர்களையும் கொன்றொழித்துக் கொண்டிருந்த அதேநேரம் யாழ்ப்பாணத்தில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கிய பிரமுகராக விளங்கிய சுரேஸ் பிரேமச்சந்திரன் (ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன்) இந்தியப் படையின் பாதுகாப்புடன் யாழ்ப்பாணம் அசோக் ஹோட்டலில் தனது காரியாலயத்தை அமைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் செயல்களையொத்த கொலைவெறிச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
யாழ்ப்பாண நகர வர்த்தக நிலையங்களில் பணம் வசூலித்தல், தமிழீழ விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிப்போரை அல்லது அவர்களது ஆதரவாளர்கள் எனச் சந்தேகிப்போரை சுட்டுக்கொலை செய்தல் அல்லது கோரத்தனமாக அவர்களது கழுத்தை வெட்டி மக்கள் பார்வைக்கு வைத்தல் என யாழ்ப்பாண மக்களை பீதிக்குள்ளாக்கும் செயல்களில் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். கழுத்தை வெட்டி கொலை செய்து கோரத்தனமான செயல்களில் ஈடுபட்ட 'மண்டையன் குழு'த் தலைவராக யாழ்ப்பாண மக்களுக்கு அறிமுகமான சுரேஸ் பிரேமச்சந்திரன், பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாசிசப் போக்குகளுக்கு துணை புரியவராகவும் அவர்களினது போராட்டத்தை 'தேசிய விடுதலைப் போராட்டம்' என இலங்கைப் பாராளுமன்றத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதியாக குரலெழுப்புபவராகவும் காணப்பட்டார்.
ஈழமக்கள் புரட்சிகர முன்னணியில் ஆரம்பகாலங்களில் இடதுசாரி அரசியல் பேசிய சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைகளை வெட்டி கோரத்தனமான கொலைகளைச் செய்து மண்டையன் குழுத் தலைவரானதுடன் இப்பொழுது 'தமிழ் தேசியம்' பேசிய வண்ணம் தமிழ் மக்களுக்குத் தலைமை கொடுக்க முன்வந்திருக்கும் நிலையைக் காண்கின்றோம். இந்தியப்படையினரும், தமிழீழ விடுதலைப் புலிகளும், 'மண்டையன் குழு'வும் யாழ்ப்பாணத்து மக்களை கொலைசெய்து கோரத்தனம் புரிந்து கொண்டிருந்ததால் எவருடைய உயிருக்கும் உத்தரவாதம் கிடையாது என்ற நிலை உருவாகத் தொடங்கியிருந்தது.
Tell me more about this murder , then i will tell u more about him and his alliance.
ReplyDelete