சரத்தின் வெற்றிக்கனியைத் தட்டிவிட்டவர் ரணில் – லால் பெரேரா.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவின் வெற்றி கைக்கெட்டிய தூரத்தில் இருந்த போது திடீரென்று தேர்தல் பரப்புரை வேலைகளில் இருந்து விலகிக் கொள்ளும்படி ரணில் விக்கிரமசிங்க கட்டளையிட்டதாகவும், அதனை பொருட்படுத்தாமல் செயல்பட்டதே தன்னை கட்சியில் இருந்து துரத்தி விடுவதற்கான முக்கிய காரணம் என்று கொழுபில் நடை பெற்ற ஊடாக சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியியையும் அதன் தொழிற் சங்கங்களையும் காப்பாற்றும் அமைப்பின் செயலாளர் லால் பெரேரா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் போது ரணில் விக்கிரமசிங்கா அவரோடு இருந்தார். ஆனால், வெற்றி கிடைக்கும் என்று தெரிந்த போது தேர்தல் பரப்புரையிலிருந்து நழுவிவிட்டார். அது மட்டுமல்ல ஐக்கிய தேசியக் கட்சியினரையும் அதிலிருந்து விலகக் கூறினார் என்று பெரேரா மேலும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment