Friday, August 10, 2012

டெசோ மாநாட்டில் தனிநாட்டுக் கோரிக்கை முன்வைத்தால் கருணாநிதிக்கு எதிராக நடவடிக்கை

டெசோ மாநாட்டின் போது இலங்கையில் தனிநாடு கோரிக்கை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கப்படும் பட்சத்தில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய ஜனதாக் கட்சித் தலைவர் கலாநிதி சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

அத்துடன் டெசோ மாநாட்டில் இலங்கையில் தனிநாட்டுக் கோரிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கக் கூடாதென எச்சரிக்கை விடுத்துள்ள அவர், அவ்வாறு இடம்பெறும் பட்சத்தில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பின் நிற்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வந்துள்ள ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் மேலும் இலங்கையில் சிங்கள, தமிழ் மக்களிடையே நிலவிவரும் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் மற்றும் நட்பிற்கு தீங்கு ஏற்படக் கூடியவாறு வெளிச் சக்திகளால் செயற்பட முடியாது எனவும், அதற்கான எதுவித உரிமையும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழ் நாட்டில் ஒரு சில அரசியல்வாதிகளுக்கு எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளர்களிடமிருந்தும் புலம்பெயர் தமிழர்களிடமிருந்தும் நிதியுதவி கிடைப்பதாகவும், தமிழ் நாட்டிலே ஒருசில குழுக்கள் மேற்கொள்ளும் திட்டங்கள் வெற்றியளிப்பதில்லை எனவும்; தேர்தல்களில் அவர்கள் போது படுதோல்வி அடையும் சூழ்நிலையிலேயே கருணாநிதி இவ்வாறான மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளதுடன் இவ்வாறான காரணங்களால்தான் அவர்கள் இலங்கைக்கு எதிரான போக்கினை கொண்டுள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment