Monday, August 13, 2012

ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா ரணிலுக்கு உதவினார்

2005 ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட ராஜபக்ஷவுக்கு ஆதரவாக எந்தவொரு துண்டுப் பிரசுரத்தையும் ஸ்ரீ,ல.சு.க வெளியிட சந்திரிகா அனுமதி அளிக்கவில்லை யென்றும், அவர் ரணில் விக்கிரம சிங்கவுக்கே ஆதரவு வழங்கினார் என்றும், அதைச் செவிமடுக்காத பொதுச் செயலாளர் மைத்திரிபால சிரிசேன, ராஜபக்ஷவின் வெற்றிக்காகப் பாடுபட்டார் என்றும், பொறியில், வீட்டு நிர்மான மற்றும் கட்டிடங்கள் அமைச்சர் விமல் வீரவன்ச பொலன்னறுவை, வெலிக்கந்தை மகாசேனபுர ஜனசெவன படைவீர்ர் கிராமத்தை நேற்று திறந்து வைத்துப் பேசிய போது குறிப்பிட்டார்.

1994 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் காமினி திசநாயக்காவைத் தோற்கடிப்பதற்கு ரணில் விக்கிமசிங்க சந்திரிகா பண்டாநாயக்காவுக்கு உள்ளகத் தகவல்களை வழங்கினார் என்று மைத்திரிபால சிறிசேனா கூறியது பற்றி ரணில் விக்கிரமசிஙக எந்த எதிர்ப்பையும் வெளியிடவில்லை. ஆனால், சந்திரிகா பயத்தினால் முந்திக் கொண்டு மறுப்பு அறிக்கை விடுக்கின்றார். 1994 ல் ரணில் சந்திகாவுக்கு உதவியதற்கு கைம்மாறாகவே 2005 ல் சந்திரிகா ரணிலுக்கு ஆதரவாகச் செயல்பட்டார் என்றும் வீரவன்ஸ குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment