அமைச்சர் ரிசாட் பதுவுதீனின் சகோதரர்களில் ஒருவர்தான் மன்னார் நீதவானை தொலைபேசியில் அச்சுறுத் தியதாக ஒத்துக்கொண்டுள்ளார் என்று, குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் 13ம் திகதி தெரிவித்ததை அனோமா குணதிலக்க தலைமையில் மன்னார் நீதவான் சார்பில் வாதாடிய இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனையடுத்து சந்தேக நபரான ரிசாட்டை ஆகஸ்டு 27 ல் நீதிமன்றத்தில் சமுகமளிக்குமாறு நீதவான் கட்டளையிட்டார்.
அமைச்சர் பதியுத்தீன் தன்னை தொலைபேசியில் அச்சுறுத்தியதாக மன்னார் நீதவான் அ. ஜூட்சன் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்ததும், ரிசாட் பதுவுதீனின் நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளரைச் சந்தித்து மேற்படி நீதவானை இடமாற்றம் செய்யுமாறு கோரியிருந்ததும், அவரின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுவோர் மன்னார் நீதிமன்றத்தை தாக்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்படத்தக்கது.
No comments:
Post a Comment