வெள்ளவத்தை கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது
வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியிலுள்ள வீடு ஒன்றிலிருந்து மூன்று சடலங்கள் மீட்கப்பட்ட கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான கொலைசெய்யப்பட்டவர்களது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று காலை கடவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
குறித்த நபர் கொழும்பிலிருந்து குருநாகலுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஒன்றில் பயணம் செய்த போது, பயணி ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய இரகசிய தகவலையடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
0 comments :
Post a Comment