ஐதேக வின் அவசர மாநாடு, பிரதித் தலைவராக ரவி, துணைத் தலைவராக ருவன்.
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் ஒரு விசேட மாநாட்டைக் கூட்டவிருப்பதாகத் தெரியவருகின்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் ரணில் எதிர்ப்புக் குழுவினருக்கு மிகவும் பாதிப்பாக அமையும் என்று கருதப்படுகின்றது.
கட்சியின் 66 வது ஆண்டு மாநாட்டை செப்டம்பர் 06 ம் திகதி தலைமையகமான சிறிகோத்தா மண்டபத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது மிகவும் நலிவடைந்ததாக காணப்படும் ரணில் எதிர்ப்பு அணியினரை ஓரங்கட்டிவிட்டு ரணிலுக்கு ஆதரவான தலைமைத்துவ சபையை நிறுவ முயற்சி எடுக்கப்படுகின்றது என்று அறிய முடிகின்றது. அதற்கேற்ப பிரதித் தலைவராக ரவி கருணாநாயக்கா, மற்றும் எதிர்கால தலைவராக வர பொருத்தமானவர் எனப்படும் ருவன் விஜேவர்தனா துணைத் தலைவராக ஆக்கப்படலாம் என்று கட்சியின் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து செய்தி கசிகின்றது.
0 comments :
Post a Comment